For Daily Alerts
Just In
பங்குச் சந்தையில் கடும் சரிவு!

மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது.
மும்பையின் பிஎஸ்ஈ (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிப்டி (NIFTY) ஆகியவற்றில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சரிவு ஆரம்பித்துவிட்டது.
இதனால் இரு பங்குச் சந்தைகளிலும் எல்லா விதமான பங்குகளின் விலையும் குறைந்தது.
பிஎஸ்ஈயின் சென்செக்ஸ் (SENSEX) குறியீட்டு எண் வெள்ளிக்கிழமை மாலை 19,013.70 ஆக இருந்தது. இன்று இன்று பெருமளவில் சரிந்து 17,999.12 புள்ளிகளைத் தொட்டது. பின்னர் மேலும் சரிந்து 16,951 புள்ளிகளைத் தொட்டது.
பிற்பகலில் நிலைமை கொஞ்சம் சரியாக 17,444 புள்ளிகளாக மேம்பட்டது.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலும் 138.30 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது.
இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.