சென்னை: தாய், காது கேளாத இரு மகள்கள் தற்கொலை
பொழிச்சலூரைச் சேர்ந்தவர் கருப்பையா (60). இவர் அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் அவர் கடையிலிருந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது மனைவி பரமேஸ்வரி (55), மகள்கள் பூர்ணிமா (28), பிரியா (24) ஆகிய மூன்று பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
பூர்ணிமாவுக்கு கல்யாணம் ஆகி விட்டது. அவரது கணவர் கொழும்பில் மளிகைக் கடை வைத்துள்ளார். தற்போது சென்னை வந்துள்ள அவர் மீண்டும் கொழும்பு செல்லாமல் இங்கேயே இருந்து வருகிறார்.
3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
3 உடல்களையும் மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!