For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் தமிழுக்கு வரும் ஜீ டிவி!

By Staff
Google Oneindia Tamil News

Zee TV
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு குழுமமான ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், மீண்டும் தமிழில் தனது சேனலை தொடங்கவுள்ளது. இந்த முறை 'ஜீ தமிழ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி 24 மணி நேர சானலாக இருக்கும்.

ஏற்கனவே 'பாரதி' என்ற பெயரில் ஜி டிவி தமிழ் சேனல் உலகில் காலடி எடுத்து வைத்தது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஜீ தமிழ் என்ற பெயரில் மீண்டும் களம் இறங்குகிறறு ஜீ.

இன்னும் ஆறு மாதத்தில் ஜீ தமிழ் தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என ஜீ நிறுவனத்தின் தெற்குப் பகுதிக்கான தலைமை செயல் அதிகாரி ராம்பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் தவிர மலையாளத்திலும் புதிய சானல் தொடங்குகிறோம்.

ஏற்கனவே பாரதி டிவி என்ற பெயரில் தமிழ் சேனலை தொடங்கினோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அது தொடங்கப்பட்டது. ஆனால் அது பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்தது.

அப்போது தொழில்நுட்ப ரீதியாகவும், கன்டென்ட் ரீதியாகவும் மிகவும் பின் தங்கியிருந்தோம். இப்போது புத்தம் புதிய டீமுடன் களம் இறங்குகிறோம். இம்முறை பெரும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்ைக உள்ளது.

ஜீ தமிழ் சானலின் வர்த்தகப் பிரிவு தலைவராக வி.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மலையாள சேனலுக்கான தலைவரைத் தேர்வு செய்யவுள்ளோம் என்றார் அவர்.

மேலும் சன் டிவி, டாடா, டிஷ் ஆகியவை போல ஜீ டிவியும் தனது சானல்களை டிடிஎச் மூலம் விநியோகிக்கவுள்ளது.

தற்போது இந்தியாவில் 20 தமிழ் சானல்கள் உள்ளன. அதில் 13 சானல்கள் பொழுதுபோக்கு சானல்கள், ஐந்து இசை சானல்கள், 2 செய்தி சானல்கள். விரைவில் கலைஞர் டிவி 24 மணி நேர செய்தி சானலை தொடங்கவுள்ளது.

இந்த வரிசையில் ஜி டிவியும் சேருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X