For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவுக்கு 3 கட்டங்களாக புலம் பெயர்ந்த ஆசியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

USA Map
நியூயார்க்: 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள், 3 கட்டங்களாக அங்கு சென்றதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஆசிய கண்டத்திலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் தொடர்ச்சியான பயணம் மூலமாக சென்றதாக இதுவரை உள்ள கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் புதிய ஆய்வில், இந்த இடப் பெயர்ச்சி தொடர்ச்சியாக நடக்கவில்லை, 3 கட்டங்களாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயிடமிருந்து குழந்தைகளுக்கு 'பாஸ்' ஆகும் மைட்டோகான்ட்ரியல் டிஎன்ஏ மற்றும் தாய், தந்தையின் ஜீன்கள் அடங்கிய நியூக்ளியார் டிஎன்ஏ ஆகியவற்றில் நடத்தப்பட்ட நுணுக்கமான சோதனைகளில் இது தெரியவந்துள்ளது.

முதன் முதலில் இடப் பெயர்ச்சி தொடங்கியபோது பேரிங் நீரிணைப் பகுதியில் ஆசியர்களின் இடப் பெயர்ச்சி பெரும் பனி மலைகளின் குறுக்கீடால் தடைப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் கானி முல்லிகன் கூறுகையில், கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு இங்கு ஆசியர்கள் தங்கியிருந்திருக்கின்றனர். அப்போது அவர்களது டிஎன்ஏவில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவிலிருந்து இடப் பெயர்ச்சி தொடங்கியது. கிழக்கு முகமாக தொடங்கிய இந்த இடப் பெயர்ச்சி அமெரிக்கக் கண்டத்தில் முடிந்துள்ளது. தற்போதைய அமெரிக்கர்களின் முன்னோர்கள் இவர்கள்தான்.

ஆசியர்கள் இடம் பெயர்ந்து சென்றபோது பேரிங் (அப்போது இதற்கு பேரிங்கியா என்று பெயர்) நீரிணைப் பகுதியில், பெரும் பெரும் பனிமலைகள் குறுக்கிட்டதால் இடப் பெயர்ச்சி தடைபட்டது.

சைபீரியாவின் சூழல், பேரிங்கியாவில் நிலவியதால் மக்கள் அங்கேயே தங்கி விட்டனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகள் அங்கேயே இருந்துள்ளனர்.

கண்ணில் பட்ட விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் அவர்களின் டிஎன்ஏவில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக பனி மலைகள் உருக ஆரம்பித்தன. இதையடுத்து மறுபடியும் இடப் பெயர்ச்சி தொடங்கியது.

இவர்களில் 1000 முதல் 1500 பேர் வரை அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இவர்கள்தான் பூர்வீக அமெரிக்கர்களின் முன்னோர்கள் ஆவர்.

பின்னர் காலங்கள் மாறி, பூமி சூடாகி, கடல் மட்டங்கள் உயர்ந்ததால் பேரிங்கியா பகுதி சுருங்கி இப்போது உள்ள பேரிங் நீரிணையாக மாறியது. இந்த சமயத்தில், மனிதர்கள் இடம் பெயர்ந்து சென்ற பல வரலாற்றுச் சிறப்பு பகுதிகள் தடம் தெரியாமல் அழிந்து விட்டன என்றார் அவர்.

இந்தப் புதிய ஆய்வு முடிவுகள், அமெரிக்கர்களின் முன்னோர்கள் குறித்த புதிய கருத்துக்கு வழி வகுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X