வக்பு நிலங்கள்-அதிமுக ஆட்சியில் விதிமீறல்
கரூர்: வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
கரூர் வந்த ஹைதர் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனி நபர்களிடமிருந்து அவை மீட்கப்படும். அவர்கள் எந்த அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில், தனி நபர்களுக்கு 99 ஆண்டு குத்தகையின் பேரில் வக்பு வாரிய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன. இதில் பெருமளவில் விதி மீறல் நடந்துள்ளது.
இந்த குத்தகை ஒப்பந்தங்களை ரத்து செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஹைதர் அலி.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!