For Quick Alerts
For Daily Alerts
பணம் பறிப்பு-தாவூத் உறவினர் கைது
மும்பை: தாதா தாவூத் இப்ராகிமின் உறவினரான சஜீத் வாக்லே நேற்று இரவு கைது செய்யபப்ட்டார்.
தாவூத் இப்ராகிமின் உறவினர் சஜீத் வாக்லே. இவரை மும்பை குற்றப் பிரிவு போலீஸார் நேற்று இரவு தெற்கு மும்பையில் கைது செய்தனர்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்ததாக வாக்லே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் வாக்லே மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த முழு விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.