For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமா பெயர்- தமிழை சீ்ர்குலைத்தால் வரிச் சலுகை இல்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழை சீர்குலைத்து திரைப் படங்களுக்கு பெயர் சூட்டினால் அதற்கு அரசின் வரிச் சலுகை கிடைக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழ் மொழியின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காக தமிழ் மொழியில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரிச் சலுகையை தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் கடந்த சில காலங்களாக தமிழ்மொழி என்று சொல்லி தமிழ் மொழியைச் சிதைத்துச் சீர்குலைக்கின்ற வகையில் பெயர்கள் சூட்டப்பட்டு திரைப்படங்கள் வெளி வருகின்றன.

அவர்கள் தங்களுக்கும் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதனால் அரசின் வரிச்சலுகை அறிவிப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுகிறது.

இதனால் தமிழுக்கு சிறிதும் பொருந்திவராத வகையில் பெயர் சூட்டப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு கண்டிப்பாக வரிச் சலுகை அளிக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X