'கிளுகிளு' ஆசை-கிடைத்தது 'கும்கும்'!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள்தான் மசாஜ் செய்யவேண்டும் என்று அடாவடி செய்த தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அசோக்நகர் லேக்வியூ ரோட்டில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நடத்தி வருபவர் டாக்டர் விஜயலட்சுமி.

வடபழனியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் நாகேந்திரன் (34). இவரது நண்பர் சுப்பிரமணி. இந்த இருவரும் டாக்டர் விஜயலட்சுமியிடம் தங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறி தலா ரூ.500 கொடுத்தனர்.

அதற்கு விஜயலட்சுமி ஒரு அறையை காட்டி "அங்கு போய் மசாஜ் செய்து கொள்ளுங்கள்'' என்றார். இருவரும் தங்களுக்கு பெண்கள்தான் மசாஜ் செய்வார்கள் என்று நினைத்தபடி ஒருவித "கிளு கிளுப்புடன்'' மசாஜ் அறைக்கு சென்றனர்.

அரைகுறை ஆடையுடன் பெண்களை எதிர்பார்த்தபடி உள்ளே நுழைந்த அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அங்கு 2 ஆண்கள் மசாஜ் எண்ணை பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்ததும் ஆவேசமான அவர்கள் விஜயலட்சுமியிடம் சென்று "நாங்கள் பெண் மசாஜ் செய்வதற்குதான் பணம் கொடுத்தோம். பெண் ஊழியரை மசாஜ் செய்யச் சொல்லுங்கள்'' என்றனர்.

இதை விஜயலட்சுமி ஏற்க மறுத்ததால் அவரது கையைப் பிடித்து ரகளை செய்தனர். அவர்களது பிடியில் இருந்து தப்பிய விஜயலட்சுமி அசோக்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் நாகேந்திரன், சுப்பிரமணியை 'நன்கு கவனித்து' விட்டு கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+