For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், கேரளாவில் விடுதலைப் புலிகள் நடமாட்டம்: நாராயணன்

By Staff
Google Oneindia Tamil News

MK Narayanan
ஆலப்புழா: தமிழகம் மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருக்கிறது. இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு வந்த நாராயணன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் விடுதலைப்புலிளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது எங்களுக்குத் தெரியும்.

இலங்கையில் நடந்து வரும் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்குத் தேவையான உதவிகளை இவர்கள் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை (ஐபி) விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றார் நாராயணன்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்று டிஜிபி ராஜேந்திரன் சமீபத்தில் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் புலிகள் இருப்பதாக நாராயணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X