For Daily Alerts
Just In
தமிழகம், கேரளாவில் விடுதலைப் புலிகள் நடமாட்டம்: நாராயணன்
கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு வந்த நாராயணன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் விடுதலைப்புலிளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது எங்களுக்குத் தெரியும்.
இலங்கையில் நடந்து வரும் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்குத் தேவையான உதவிகளை இவர்கள் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை (ஐபி) விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றார் நாராயணன்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்று டிஜிபி ராஜேந்திரன் சமீபத்தில் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் புலிகள் இருப்பதாக நாராயணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Monday, March 17, 2008, 11:11 [IST]