For Daily Alerts
Just In
பெண் நிருபரை மானபங்கம் செய்த நடிகையின் வாட்ச்மேன்!
மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீதத்தா படப்பிடிப்பில் இருந்த ஸ்டுடியோவின் வாட்ச்மேன், இளம் பெண் நிருபரை மானபங்கம் செய்ததாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பயிற்சி நிருபராக இருக்கும் அந்த 19 வயது பெண், தனது கேமராமேனுடன் கோராகானில் உள்ள பிலிம்ஸ்தான் ஸ்டுடியோவுக்கு சென்றார்.
அங்கு தனுஸ்ரீ தத்தாவிடம் அவர் கலந்து கொண்ட படப்பிடிப்பு குறித்து கேள்வி கேட்க முயன்றார். ஆனால் அவர்கள் இருவரையும் ஸ்டுடியோ பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
அப்போது பவன் பரத்வாஜ் என்கிற பாதுகாவலர், பெண் நிருபரின் கையைப் பிடித்து மானபங்கப்படுத்த முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கேமராமேன், பெண் நிருபரை, பாதுகாவலரின் பிடியிலிருந்து மீட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, March 27, 2008, 14:52 [IST]