For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி கிரகத்தின் சந்திரனில் தண்ணீர்- உயிர்களுக்கும் வாய்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

Enceladus and Saturn
வாஷிங்டன்: சனிக்கிரகத்தை சுற்றிவரும் ஒரு துணை கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிரகத்தை பல துணை கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதில் என்சிலாடஸ் என்ற துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய காஸினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

இந்த ஆய்வு பற்றி கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாறி எஸ்போசிடோ கூறுகையில், 501 கி.மீட்டர் விட்டமுள்ள என்சிலாடஸ் துணை கிரகத்தின் தென்முனையில் பல வாயுஓட்டங்கள் உள்ளன. இந்த வாயுஓட்டங்களை ஆராய்ந்தபோது அதில் அடர்த்தி அதிகமான நிராவி, கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு இருப்பது தெரிந்தது.

இது தவிர மீத்தேன் வாயுவும் இருந்தது. திரவநிலையில் தண்ணீர் இல்லாவிட்டாலும் மிக அடர்த்தியான நிராவி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உயிரினங்கள் வாழ்வதற்கு மூன்று அத்தியாவசியப் பொருள்களான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டநிலையில் சனிகிரகத்தின் துணை கோள்களில் உயிர்வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X