For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனாட்சி திருக்கல்யாணம்: 'நெட்'டில் நேரடி ஒளிபரப்பு!

By Staff
Google Oneindia Tamil News

Madurai
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வருகிற 9ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் அழகர் இறங்குவது ஆகியவை ஆகும்.

பட்டாபிஷேகம் 16ம் தேதி நடக்கிறது. திருக்கல்யாணம் 18ம் தேதி நடைபெறுகிறது. 19ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளுவார்கள்.

திருக்கல்யாண வைபவம் வழக்கமாக டிவிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்த முறை முதல் முறையாக இன்டர்நெட்டில் நேரடியாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://maduraimeenakshi.org/ என்ற தளத்தில் திருக்கல்யாண வைபவத்தை நேரடியாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்று கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் டி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த இணையதளத்தில் கோவில் குறித்த அனைத்து விவரங்களும், ஆன்லைனில் பூஜை செய்வது உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X