For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புடின் கல்யாணச் செய்தி தவறு: ரஷ்ய இதழ் பல்டி

By Staff
Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், 24 வயது ரஷ்ய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அலினா கபயேவாவை கல்யாணம் செய்யப் போவதாக தாங்கள் வெளியிட்ட செய்தி தவறு என்று ரஷ்ய இதழான மாஸ்கோவ்ஸ்கி கரஸ்பான்டென்ட் மன்னிப்பு கேட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து வெளியாகும் மாஸ்கோவ்ஸ்கி இதழில் 56 வயதாகும் புடினும், 24 வயது கபயேவாவும் காதலிப்பதாகவும், இருவரும் ஜூன் 15ம் தேதி கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், புடினும், அவரது மனைவி லுட்மிலாவும் விவாகரத்து செய்து விட்டதாகவும் அது கூறியிருந்தது.

ஆனால் இவை அனைத்தும் வதந்தி, தவறான செய்தி என்று மாஸ்கோவ்ஸ்கி தற்போது பல்டி அடித்துள்ளது. தவறான செய்தியை வெளியிட்டதற்காக அது மன்னிப்பும் கோரியுள்ளது.

இதுகுறித்து மாஸ்கோவ்ஸ்கி தனது இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தியால் பலருக்கும் மன வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த செய்தியில் உண்மையைத் தவிர அனைத்தும் உள்ளதை ஒப்புக் கொள்கிறோம். எங்களது தவறை ஏற்றுக் கொள்கிறோம்.

இப்படி ஒரு தவறான செய்தியை வெளியிட்டு, நாட்டின் முக்கிய பிரமுகர்களை அவமானப்படுத்தியதற்காக வருத்தப்படுகிறோம் என்று கூறியுள்ளது மாஸ்கோவ்ஸ்கி.

முன்னதாக மாஸ்கோவ்ஸ்கியின் செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்த அலினா, உடனடியாக இந்த செய்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என மாஸ்கோவ்ஸ்கியை எச்சரித்திருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X