For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிண்ட்ராப் தலைவர்கள் விடுவிக்க கடித பிரசாரம்!

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் (ஹிண்ட்ராப்) தலைவர்கள் ஐந்து பேரையும் விடுவிக்க கோரி கடிதப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமருக்கும், ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், ஐந்து தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி கடிதம் அனுப்புமாறு ஹிண்ட்ராப் அமைப்பு கோரியுள்ளது.

மலேசியப் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தில், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் மிகவும் கொடுமையானது மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமானதும் கூட. இது அனைத்து நாட்டு சட்டங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் புறம்பானது.

ஜனநாயக விரோதமான, இந்த சட்டத்தால் மலேசியாவுக்கு உலக அளவில் மிகப் பெரும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது.

இயற்கை நீதிக்கு முரண்பாடாக இந்த சட்டம் விளங்குகிறது. கைது செய்யப்படும் அல்லது குற்றமிழைக்கும் ஒரு நபர் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும், வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே இயற்கை நீதி. ஆனால் அதற்கு முரணாக இருக்கிறது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம்.

எந்தவித விசாரணையும் இல்லாமல், நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படாமல் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைத்திருப்பது இரக்கமற்ற செயல்.

எனவே இந்த உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்குமாறு ஹிண்ட்ராப் அமைப்பு கோரியுள்ளது.

மலேசிய பிரதமர், துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஐ.நா. மனித உரிமை விவகாரத் தலைவர் ஆகியோருக்கு கடிதம், பேக்ஸ் அல்லது இமெயில் அனுப்புமாறு ஹிண்ட்ராப் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசியப் பிரதமரின் முகவரி

Abdullah Ahmad Badawi
Blok Utama, Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan
62502, Putrajaya. Malaysia
Telephone: 603-8888 8000
Fax: 603-8888 3444
Email:[email protected]

துணைப் பிரதமரின் முகவரி

Mohd Najib Bin Tun Haji Abdul Razak
Aras 4, Blok Barat,Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan
62502, Putrajaya. Malaysia
Telephone: 603-8888 1950
Fax: 603-8888 0035
Email: [email protected]

உள்துறை அமைச்சரின் முகவரி

Syed Hamid Albar
Minister of Home Affairs&Internal Security Address:
Minister of Internal Security and Home AffairsLevel 12, Block D1,
Parcel D, Pusat Pentadbiran Kerajaan Persekutuan
62546, Putrajaya, Malaysia
Telephone: 603-8886 8000
Fax: 603-8889 1613
Email : [email protected]

ஐ.நா. மனித உரிமை தலைவர் முகவரி

Chairperson of United Nations Human Rights
Office of the High Commissioner for Human Rights, Palais des Nations, CH-1211 Geneva 10, Switzerland

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X