For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை 2 சாப்ட்வேர் பார்க்குகள்-நாளை அடிக்கல்: விமான நிலையமும் விரிவாக்கம்

By Staff
Google Oneindia Tamil News

IT Park
மதுரை: மதுரையில் 2 இடங்களில் உருவாக்கப்படவுள்ள சாப்ட்வேர் பூங்காங்களுக்கு முதல்வர் கருணாநிதி நாளை (26ம் தேதி) அடிக்கல் நாட்டுகிறார். அதே போல மதுரை விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அமைக்கும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

எல்காட் நிறுவனம் மதுரை பாண்டி கோவில் அருகே இலந்தைகுளத்தில் 29 ஏக்கர் நிலத்தில் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கிறது.

அதே போல மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள வடபழஞ்சியில் 236 ஏக்கரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்காக டைடல் பார்க் அமைக்கப்படுகிறது.

மதுரை அவனியாபுரம் விமான நிலையமும் ரூ. 150 கோடி செலவில் விரிவாக்கப்படவுள்ளது. அங்கு 166 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள புதிய டெர்மினலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த மூன்று பணிகளுக்குமான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி நாளை மதுரை செல்கிறார்.

விமான நிலைய விரிவாக்க விழாவில் கருணாநிதியுடன் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரபுல் படேலும் கலந்து கொள்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X