For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் இன்று சூப்பர்கிங்ஸ் vs நைட் ரைடர்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஆளுக்கு தலா 2 வெற்றிகளை குவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மாலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதவிருப்பதால் ரசிகர்கள் பரபரப்படைந்துள்ளனர்.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 2-வது ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக் கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சேப்பாக்கத்தில் நடந்த முதல் ஆட்டம் அதிரடியாகவும் பரபரப்பாகவும் இருந்தது. சென்னை அணியில் ஹைடன், சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோனி ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன்சிங், நாயர் ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டு அணியும் சேர்ந்து 400 ரன்களுக்கு மேல் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அதே அதிரடியான ஆட்டம் இன்று நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இன்றைய ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் ஸ்டேடியம் நிரம்பி வழியும் என்று தெரிகிறது. ஆட்டம் துவங்க பல மணிநேரத்துக்கு முன்பே சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தின் முன் ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர்.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளுமே தாங்கள் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன. சென்னை அணி பேட்டிங் திறனை ஒப்பிட்டால் அதன் பந்துவீச்சு சுமார்தான். கொல்கத்தா அணி பேட்டிங் மற் றும் பந்து வீச்சில் சிறந்து விளங்குகிறது.

இன்றைய ஆட்டம் சென்னை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X