For Daily Alerts
Just In
குஜ்ஜார் கலவரம்: பாஜக கூட்டம் டெல்லிக்கு மாற்றம்
டெல்லி: குஜ்ஜார் இன மக்களின் போராட்டம் காரணமாக ராஜஸ்தானில் நடக்க இருந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வரும் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற இருந்தது.
ஆனால் அம் மாநில பாஜக அரசுக்கு எதிராக குஜ்ஜார் இன மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக செயற்குழு கூட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்சியி்ன் தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தகவலை கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
குஜ்ஜார் கலவரம் காரணமாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம், ஜெய்ப்பூரில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.