For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண வீக்கம் 8.24% ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பண வீக்க விகிதம் 8.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண வீக்கம் விரைவில் 9 சதவீதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விலைவாசி தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நாட்டின் பண வீக்க விகிதம் 8.24% ஆக அதிகரித்துள்ளது. மே 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பண வீக்கம் 8.24% ஆக இருந்தது. முந்தைய வாரத்தில் இது 8.10 சதவீதமாக இருந்தது.

வருடாந்திர பண வீக்கி விகிதம் 5.15 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து விலைவாசி உயர்வு இருந்து வருவதால், பண வீக்கம் விரைவில் 9 சதவீதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X