தண்டவாளத்தில் பிளவு-ரயில் விபத்து தவிர்ப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட பெரிய பிளவு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் ரயில் விபத்து தவி்ர்க்கப்பட்டுள்ளது.
திண்டு்க்கல்-அம்பாத்துறை ரயி்ல் நிலையங்களுக்கு இடையே மொத்தனம்பட்டி என்ற இடத்தில் தண்டவாளத்தில் பெரிய பிளவு ஏற்பட்டது.
கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கேங்மேன் அதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தந்தையடுத்து அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பொறியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று பிளவுபட்ட தண்டவாள பகுதியை மாற்றினர். இதையடு்த்தே போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
இச் சம்பவத்தால் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்-மதுரை பாசஞ்சர் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாயின.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!