For Quick Alerts
For Daily Alerts
ஷார்ஜாவில் கால் பதிக்கிறது கோவை எல்ஜி
கோவை: ஏர் கம்ப்ரஷர்கள் உள்ளிட்ட கட்டுமானத் துறைக்கான எந்திரங்களை தயாரித்து வரும் கோவையைச் சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், ஷார்ஜாவில் 'எல்ஜி கல்ப் எப்இசட்இ' என்ற பெயரில் துணை நிறுவனத்தைத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், எங்கள் நிறுவனத் தயாரிப்புகளை 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு 20 சதவீதமாக இருக்கிறது.
இந்த நாடுகளில் கட்டுமானத் தொழில் வேகமான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவை வழங்க முடியும் என்றார் ஜெய்ராம்.