For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹார்வர்ட்-மீண்டும் பாடம் நடத்த போகும் சுவாமி

By Staff
Google Oneindia Tamil News

Subramaniam Swamy
சென்னை: ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை, பாடம் எடுக்க வருமாறு புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளதாம். இதை ஏற்று ஜூன் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை பாடம் நடத்தப் போகிறார் சுவாமி.

ஜனதாக் கட்சித் தலைவர் சுவாமி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கடந்த 7 ஆண்டுகளாக அங்கு பட்டதாரி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார் சுவாமி.

இந் நிலையில் இந்த ஆண்டும் பாடம் எடுக்க வருமாறு சுவாமிக்கு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று ஜூன் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம்தேதி வரை ஹார்வர்டில் பாடம் நடத்தப் போகிறார் சுவாமி.

இந்தக் கோடைகாலத்தில் இரு வகுப்புகளை அவர் எடுப்பார். பொருளாதாரத்தில் கணிதவியல் முறைகள் குறித்து ஒரு பாடமும், சீன மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வு என்றதலைப்பில் இன்னொரு வகுப்பையும் அவர் எடுக்கவுள்ளார்.

சுவாமி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X