• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொகாலி ஸ்டேடியத்தில் மீண்டும் கபில் கட்அவுட்

By Staff
|

Kapil Dev
புதுடெல்லி: மொகாலி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அகற்றப்பட்ட இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவின் கட் அவுட் மீண்டும் அதே இடத்தில் புதுப் பொலிவுடன் வைக்கப்பட்டது.

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த ஒரே கேப்டனும், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் முதலிடத்தில் இருப்பவருமான கபில்தேவுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் பல ஆண்டுகளாகவே சரியான உறவு இல்லை.

கபில்தேவ் அணிக்காக செய்த பல சாதனைகளை வாரியம் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதை பலரும் வெளிப்படையாகக் கண்டித்தும் கூட வாரியம் தன் அலட்சியப் போக்கைத் தொடர்ந்தது. வாரியத்தின் முக்கியப் பொறுப்புகளில் யார் யாருக்கோ பதவி வழங்கப்பட, கபில் புறக்கணிக்கப்பட்டார்.

அணியின் முன்னேற்றத்துக்காக அவர் எடுத்து வைத்த யோசனைகளைத் தள்ளிய வாரியம், இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் என்ற ஒப்புக்கு சப்பாணியான ஒரு பதவியைக் கொடுத்து கபிலை ஓரம் கட்டியது.

இந்த நேரததில் ஜீ குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா, கபில் தலைமையில் இந்திய கிரிக்கெட் லீக் எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார்.

இந்த அமைப்பின் மூலம், சர்வதேச வீரர்களைக் கொண்ட புதிய அணிகளை கபில் உருவாக்கினார். கவுண்டி கிளப் போட்டிகள் மாதிரி ஆண்டுதோறும் உலகமெங்கும் போட்டிகள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். வீரர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை தங்களுக்குப் போட்டியாகக் கருதிய வாரியம், கபிலை முழுமையாக வாரியத்திலிருந்தே நீக்கியது. அவரது கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி பிடுங்கப்பட்டது.

ஆனால் இன்னொரு பக்கம், கபிலின் ஐசிஎல்லுக்குப் போட்டியாக, ஆனால் அவரது ஐடியாவைக் காப்பியடித்து ஐபிஎல் என்ற புதிய அமைப்பைத் தொடங்கியது வாரியம். கடந்த இரு மாதங்களாக ஐபிஎல் போட்ட ஆட்டம்தான் இந்திய மீடியாவை ஆக்கிரமித்திருமந்தன. உண்மையில் இந்த யோசனையை, அகாடமி தலைவராக இருந்த போதே கபில் முன் வைத்தார். தானே முன்னின்று அந்தப் போட்டிகளை நடத்துவதாகக் கூட குறிப்பிட்டார். ஆனால் வாரியம் அப்போது அலட்சியம் செய்துவிட்டது.

வாரியத்திலிருந்து கபில் நீக்கப்பட்டதுமே, அவரை அவமானப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகளில் இறங்கியது வாரியம்.

கபிலின் சொந்த ஊரான சண்டிகருக்கு அருகே உள்ள மொகாலி மைதானத்தில் கபிலின் பிரமாண்ட கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. 1994-ம் ஆண்டு 434 விக்கெட்டுகளைச் சாய்த்து ஹாட்லியின் சாதனையை முறியடித்த கபில்தேவைச் சிறப்பிக்கும் விதத்தில் மொகாலி மைதானத்தில் பிரமாண்ட கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டது.

இதுதவிர, ஒவ்வொரு வெற்றியின் போதும் தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் உலகக் கோப்பையை வென்று வந்தபோது வழங்கப்பட்ட பரிசுகள் போன்றவற்றை பஞ்சாப் கிக்கெட் சங்கத்திடம்தான் கொடுத்திருந்தார் கபில். இவை அனைத்தும் மொகாலி அரங்கில் பெருமைக்காக வைக்கப்பட்டிருமந்தன.

வாரியத்திலிருந்து கபில் நீக்கப்பட்ட கையோடு, இவற்றையெல்லாம் அகற்றிவிட்டது பஞ்சாப் கிரிக்கெட் சங்கம். அந்த பிரமாண்ட போஸ்டரும் அகற்றப்பட்டது.

கொதித்துப் போன கபில், தன்னுடைய வெற்றிக்காகக் கிடைத்த பரிசுகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் கோப்பைகளை தன்னிடம் திரும்ப ஒப்படைக்குமாறு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதினார்.

இந்நேரம் பார்த்து கபில் அணி உலகக் கோப்பையை வென்றதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் வந்துவிட்டன.

வேறு வழியில்லாமல், எந்த கபிலை வாரியத்திலிருந்து நீக்கினார்களோ, அவருக்கே பாராட்டு விழா எடுத்தாக வேண்டிய கட்டாயம் வாரியத்துக்கு. அதுமட்டுமல்ல, 1983 வெற்றியின் ஹீரோக்கள் பெரும்பாலும் இப்போதும் கபில் தலைமையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல்வீந்தர் சிங் சாந்து, மதன்லால், பின்னி, அமர்நாத் போன்ற முக்கிய வீரர்கள் இப்போது ஐசிஎல் அமைப்பில் உள்ளனர். இவர்களையெல்லாம் விட்டுவிட்டு பாராட்டு விழா நடத்த முடியாதல்லவா...

எனவே வாரியத்தின் சார்பில் காவஸ்கர் தூது போய், அனைவரையும் வெற்றி விழாவுக்கு வர சம்மதிக்க வைத்தார்.

கடந்த புதன்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 1983 அணி வீரர்கள் அனைவருமே மீண்டும் கபில் தலைமையில் கூடினர். உலகக் கோப்பைகளை வென்று திரும்பிய அந்த கணங்களை மீண்டும் மனதுக்குள் அசை போட்டு மகிழந்தனர். பத்திரிகையாளர்களிடம் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அன்று இரவு லார்ட்ஸில் அனைத்து வீரர்களுக்கும் பிரமாண்ட விருந்து அளிக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக பத்திரமாக்கப் பாதுகாக்கப்பட்டு வந்த இந்திய அணியின் ஒரே உலகக் கோப்பை வெளியில் எடுக்கப்பட்டு கேப்டன் கபிலிடம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு வீர்ர்ருமந் அந்தக் கோப்பையை தஙஅகள் கைகளில் ஏந்தி மகிழந்தனர்.

முந்தைய வெறுப்புணர்வு இப்போது ஓரளவு மறையத் தொடங்க, பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், சில தினங்களுக்கு முன் அகற்றப்பட்ட கபிலின் அத்தனை படங்கள் மற்றும் போஸ்டர்களையும் மீண்டும் ஸடேடியத்தில் வைத்திருக்கிறது.

அந்த பிரமாண்ட கட் அவுட்டையும் மீண்டும் பழைய இடத்திலேயே பொருத்தியுள்ளது.

கபில் படத்தை நாங்கள் அகற்றவில்லை. கடும் சூறைக்காற்று அதைச் சாய்த்துவிட்டது. புதிய கட் அவுட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்தோம். ஐபிஎல் போட்டிகளில் பிஸியாக இருந்ததால் அதைக் கவனித்து வாங்க முடியாவில்லை. இப்போதுதான் தயாரானதுகட் அவுட் . இதோ பொருத்திவிட்டோம். என்ன இருந்தாலும், கபில் எங்கள் மண்ணின் ஹீரோ அல்லவா..., என்கிறார் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத் தலைவர் கொஞ்சமும் நா கூசாமல்!

மாவீரர்கள் எப்போதும் தோற்றதே இல்லை... தற்காலிகமாக விழுவதுபோல் தெரிந்தாலும், மீண்டும் எந்த நேரத்திலும் விஸ்வரூபம் எடுப்பார்கள், கபில் மாதிரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X