For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் தேடி விடிய விடிய அலைந்த பொதுமக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் கையில் கேன்களுடன் விடிய விடிய அலைந்து சுற்றி தவித்துப் போயினர். பல இடங்களில் இரவையும் பொருட்படுத்தாமல் கணிசமான அளவில் பெண்களும் தவிப்புடன் காணப்பட்டனர்.

பெரும்பாலும் போர் நடக்கும் நாடுகளிலும், கலவர பூமிகளிலும்தான் பொருட்களுக்கும், எரிபொருளுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் சென்னை நகரிலோ நேற்று நிலைமை தலைகீழாக மாறிப் போனது.

சொல்லாமல் கொள்ளாமல் வந்த சுனாமியைப் போல, நேற்று திடீரென ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். நகரில் பாதிப் போக்குவரத்து முடங்கிப் போனது.

காலையில் ஆரம்பித்த இந்த தட்டுப்பாடு காட்டுத் தீ நகர் முழுவதிலும் பரவியது. பிற்பகல்வாக்கில் நகரில் உள்ள 90 சதவீத பங்குகள் ஸ்டாக் இல்லை என்று கூறி மூடப்பட்டு விட்டன. புறநகர்ப் பகுதிகளிலும் அதே நிலைதான். தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கூட இதேபோல தட்டுப்பாடு ஏற்பட்டு பங்குகள் மூடப்பட்டன.

பெட்ரோல், டீசல் இல்ைல என்று கூறி பங்குகள் மூடப்பட்டதால் வாகனதாரர்கள் பெரும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளாகினர். திறந்திருந்த பெட்ரோல் பங்குகள் முன்பு நூற்றுக்கணக்கில் கூடி பெட்ரோல், டீசல் வாங்க குழுமினர். இதனால் மோதல் சூழ்நிலைகாணப்பட்டது.

போலீஸார் வரவழைக்கப்பட்டு வாகனங்களை வரிசையில் நிறுத்தி டீசல் வாங்க வழி செய்தனர். இதன் காரணமாக பெட்ரோல் பங்குகள் முன்பு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

மணப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல், பெட்ரோல் பிடிக்க பெருமளவில் கூட்டம் கூடி விட்டது. வாகனங்களும் அனுமார் வால் கணக்கில் நீண்டு நின்றன. இதனால் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்தப் பாதை வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. போலீஸார் அதிகஅளவில் வரவழைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தினர்.

தாம்பரம் முடிச்சூர்சாலையில் பெரும் தள்ளுமுள்ளே ஏற்பட்டது. குரோம்பேட்டையிலும் இதே கதைதான். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பான நிலைகாணப்பட்டது.

பகலில் பெட்ரோல், டீசல் வாங்கஅலை மோதிய கூட்டம் இரவு முழுவதும் விடாமல் அல்லாடியது. பல இடங்களில் பெண்கள் பெட்ரோல் இல்லாமல் வண்டிகளைத் தள்ளிக் கொண்டு வந்து வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.

திருமண நாளையொட்டி கோவிலுக்கு கணவர், இரு குழந்தைகளுடன் கிளம்பிய ஒரு பெண்மணி காரில் பெட்ரோல் இல்லாததால், கணவரை காருக்குள் அமர வைத்து விட்டு குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.

இன்று காலையும் கூட சகஜ நிலை திரும்பவில்லை. பல பங்குகள் மூடிக் கிடக்கின்றன. திறந்திருக்கும் பங்குகளிலும் காலையிலேயே கூட்டம் அலை மோதியத

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X