For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தக்கலை பள்ளிவாசல் ஆண்டு விழா: குமரியில் 18-ம் தேதி விடுமுறை

By Staff
Google Oneindia Tamil News

தக்கலை: புகழ் பெற்ற தக்கலை பீரப்பா பள்ளிவாசல் (Peerappa masjid) ஆண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

விழாவையொட்டி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மெÜலூது ஓதும் நிகழ்ச்சியுடன், மார்க்க பேரூரையாற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

9-ம் தேதி சென்னை தலைமை இமாம் ஷதீதுத்தின் பாசில் பாகவி "உற்றாருமில்லை உறவாருமில்லை இங்குன்னையன்றி' என்ற தலைப்பில் பேசுகிறார்.

10,11-ம் தேதிகளில் சென்னை அரபிக் கல்லூரி நிறுவனர் முகம்மது ஷபீர் ஆலிம்பாசில் பாகவி "ஏந்தல் நபியின் எதிர் நீச்சல்' என்ற தலைப்பில் பேசுகிறார். 12-ம் தேதி "மனிதன் தூங்குகிறான் மரணம் விழித்திருக்கிறது' என்ற தலைப்பிலும், 13-ம் தேதி "ஷரீஅத்தும் தரீகத்தும்' என்ற தலைப்பில் புதுக்கோட்டை மேலப்பள்ளிவாசல் இமாம் ரபீயுத்தீன் பாகவி பேசுகிறார்.

14-ம் தேதி "கலிமாவை நெஞ்சுள் கலங்காமல் தஹாக்கனவனே' என்ற தலைப்பிலும், 15-ம் தேதி "இஸ்லாம் நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பிலும் சேலம் அரபிக் கல்லூரி பேராசிரியர் முகம்மது அபுதாகீர் பாகவி பேசுகிறார்.

16-ம் தேதி நடக்கும் இலக்கிய கருத்தரங்கில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகிக்கிறார். இதில் பீரப்பா இலக்கியங்களில் கதையாடல்கள் என்ற பொருளில் உத்தமபாளையம் பேராசிரியர் அப்துல்சமதும், பீரப்பா பாடல்களில் அல்குர்ஆன் சிந்தனைகள் என்ற பொருளில் பேராசிரியர் அப்துல் ரகுமான் ஆகியோர் பேசுகின்றனர்.

17-ம் தேதி இரவு 9 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீரப்பா எழுதி பாடிய ஞானப்புகழ்ச்சி பாடலைப் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிகழ்ச்சி இரவு தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடைபெறும்.

இதைத் தொடர்ந்து 18-ம் தேதி மாலை 4 மணிக்கு நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும், 20-ம் தேதி இரவு 7 மணிக்கு 3-ம் சியாரத் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை:

இந்த விழாவையொட்டி வரும் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி. ஜோதி நிர்மலா உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினத்திற்கு ஈடாக ஆகஸ்ட் 2-ம் சனிக்கிழமை (ஆக. 9) மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும்.

ஜூலை 18-ம் தேதி மாவட்டத்திலுள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்களுக்கும் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும் ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X