For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'யூ டியூபை' கலக்கும் லாலுவின் 'இந்திலீஷ்'!

By Staff
Google Oneindia Tamil News

Lalu prasath,Manmohan singh and Sonia gandhi
லண்டன்: ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, தான் வடித்த இந்திக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க லாலு பிரசாத் திணறிய காட்சி அடங்கிய வீடியோ, யூ டியூப் இணையதளம் மூலம் உலகெங்கும் கலக்கி வருகிறது.

ஏற்கனவே லாலு பிரசாத் தனது செயல்களாலும், சேஷ்டைகளாலும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மத்தியில் படு பாப்புலராக உள்ளார். இந்த நிலையில், அவர் குறித்த புதிய வீடியோ படம் ஒன்று யூ டியூப் மூலம் வேகமாக பரவி வருகிறது.

லாலுவின் காமெடி கலந்த பேச்சும், அவரது ஸ்டைலும் ரொம்பவே பிரபலமானது. இந்த வீடியோவிலும் அதுதான் ஹைலைட்டான விஷயமாக உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் லாலு பிரசாத் யாதவ் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது தான் எழுதிய இந்திக் கவிதை ஒன்று வழக்கம் போல இழுத்துப் பேசியவாறு வாசித்தார். அப்போது பல எம்.பிக்கள் குறுக்கிட்டு ஒன்னும் புரியலை, ஆங்கிலத்தில் சொல்லுங்க என்று கோரினர்.

அவர்களை கைகளால் அமைதிப்படுத்திய லாலு, நானே அதையும் செய்கிறேன் என்று கூறி முதலில் இந்திக் கவிதையை முழுக்க வாசித்து முடித்தார். பின்னர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. திக்கித் திணறி அவர் டிரான்ஸ்லேட் செய்ததைப் பார்த்து அவையில் அங்கம் குழுங்க சிரிப்பலை. சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் பொங்கி வந்த சிரிப்பை கமுக்கமாக கைகளால் மறைத்துக் கொள்கிறார்.

இந்தக் காட்சிதான் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. பிப்ரவரி 26ம் தேதி இந்த வீடியோ யூடியூபில் இடம் பெற்றது. அதன் பின்னர் இதுவரை மூன்றரை லட்சம் பேர் இதைப் பார்த்து சிரித்துள்ளனராம்.

லாலு என்பதற்குப் பதில் பேசாமல் 'லாஃப்டர்' என்று பெயர் வைத்திருக்கலாம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X