For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஹிட்' குவிக்கும் ஸ்டாலினின் வெப் சைட்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ள இணையதளத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் இந்த இணையதளத்தை பார்வையிட்டு குறைகளையும், புகார்களையும் பதிவு செய்கின்றனராம்.

தனது பெயரில் புதிய இணையதளம் ஒன்றை சமீபத்தில் உருவாக்கினார் ஸ்டாலின். www.mkstalin.net என்ற அந்த இணையதளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக இளைஞர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகள், குறைகள், புகார்களை பதிவு செய்து வருகிறார்களாம்.

முதல்வர் கருணாநிதி அதிகாலையில் எழுந்து தனது வேலைகளை ஆரம்பிப்பவர். ஆரம்ப காலம் முதல் 80 வயதைத் தாண்டிய இக்காலகட்டத்திலும் அந்தப் பழக்கத்தை ஒருபோதும் அவர் விட்டதில்லை. அதேபோல ஸ்டாலினும் அதிகாலையிலேயே எழுந்து வாக்கிங்குடன் தனது வேலைகளைத் தொடங்கி விடுகிறார்.

வாக்கிங்கின்போது வெறுமனே நடப்பதோடு நின்று விடாமல் சென்னை மாநகரில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை திடீர் விசிட் அடித்து ஆய்வு செய்வதும் அவரது ஸ்டைல். டீக்கான டீ சர்ட்டுடன் சம்பந்தப்பட்ட ஸ்பாட்டுக்கு அவர் விசிட் அடிப்பார்.

அதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். பொதுமக்களும், திமுகவினரும்தான் ஸ்டாலினைப் பார்த்து வரவேற்று திட்டப் பணிகள் குறித்து அவரிடம் கூறுவார்கள். அவரும் மக்களிடம் குறைகளை கேட்டபடியே வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்து விடுவார்.

இப்படி சுறுசுறுப்புடன் செயல்படும் ஸ்டாலின் தனது செயல்பாடுகளுக்கு வசதியாகவும், தனது துறை என்ன செய்கிறது, தான் எப்படி செயல்படுகிறோம் என்பதை அனைவரும் அறியும் வகையில்தான் தனது பெயரில் இணையதளத்தை உருவாக்கினார். மேலும் தன்னை அணுக விரும்புவோர் இ-மெயில் மூலம் புகார்களையும், குறைபாடுகளையும் தெரிவிக்கவும் இந்த இணையதளம் உதவும் என்ற எண்ணத்திலும் உருவானதுதான் இந்த வெப்சைட்.

தினசரி நூற்றுக்கணக்கானோர் இந்த தளம் மூலமாக தங்களது புகார்களையும், கோரிக்கைகளையும் குவிக்கின்றனராம்.

இதுதவிர சென்னை மாநகர வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஏகப்பட்ட ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனராம்.

தனக்கு வரும் ஒவ்வொரு மெயிலையும் தவறாமல் படிக்கும் ஸ்டாலின் அதில் கூறப்படும் ஆலோசனைகளை கூர்ந்து கவனித்து நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து ஆவண செய்யுமாறு அறிவுரை கூறுகிறாராம்.

விலைவாசி உயர்வு, அடிப்படை வசதிகள், பழனி கோவில் பராமரிப்பு, போக்குவரத்து நெரிசல், வேலைவாய்ப்பு, பறக்கும் ரெயில், பஸ், ஆட்டோ, மின்சார தட்டுப்பாடு போன்றவை தொடர்பாக புகார்களும் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X