For Daily Alerts
Just In
'சாபிர்' ராக்கெட் மூலம் சாட்டிலைட் ஏவிய ஈரான்
சாபிர்-1 என்ற இந்த ராக்கெட் டம்மி செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.
இதன்மூலம் வளைகுடா நாடுகளில் செயற்கைக் கோள் தயாரிப்பிலும், அதை ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்திலும் புதிய வரலாறு படைத்துள்ளது ஈரான்.
அணு ஆயுத உற்பத்தியுள்ள ஈடுபட்டுள்ளதாகக் கூறி ஈரானை அமெரிக்கா மிரட்டி வரும் நிலையில், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்கலாம் என்ற சூழ்நிலை உள்ள நிலையில் இந்த சாதனையை படைத்துள்ளது ஈரான்.
இந்த ராக்கெட் வெற்றியையடுத்து விரைவில் ஒமிட் (நம்பிக்கை) என்ற தொலைத் தொடர்பு செயற்கைக் கோளை ஏவப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
Comments
Story first published: Monday, August 18, 2008, 12:21 [IST]