For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.43 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் வரத்து சற்று குறைந்துள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக காவிரி அணைகளிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தற்போது நீரின் வரத்து சற்று குறைந்துள்ளது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 82.43 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9980 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரத்து 38 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து சற்று அதிகரித்தால் அணை விரைவில் 100அடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X