For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சார்லஸுக்குப் பதில் இளவசர் வில்லியமை மன்னராக்க முடிவு?

By Staff
Google Oneindia Tamil News

Charles and William
லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த மன்னராக இளவரசர் வில்லியம் பதவியேற்பார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்தான் அடுத்த மன்னராக பதவியேற்பார் என்பது பொதுவான கருத்தாக இருந்து வரும் நிலையில், அவருக்குப் பதில் சார்லஸ் - டயானா தம்பதியின் மூத்த மகனான வில்லியம் மன்னராவார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரச குடும்பத்துக்குள் உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக இளவரசர் சார்லஸிடம் அரச குடும்பத்தினர் பேசி வில்லியம் மன்னராக வழி விடுமாறு பேச்சு நடத்தியுள்ளனராம்.

சார்லஸ் விதவைப் பெண்ணான கமீலா பார்க்கரை கல்யாணம் செய்து கொண்டதுதான் இப்போது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. உலகின் மிகப் பழமையான அரச குடும்பம் மட்டுமல்லாமல், பழமையான கருத்துக்களிலும் ஊறிப் போனது இங்கிலாந்து அரச குடும்பம். எனவே கமீலாவை தங்களது ராணியாக பார்க்க அவர்களுக்கு மனம் வரவில்லை. எனவேதான், சார்லஸுக்குப் பதில் வில்லியமை மன்னராக்கி விட அவர்கள் முடிவு செய்து விட்டனர்.

26 வயதாகும் வில்லியம்தான் இங்கிலாந்து அரச பரம்பரையின் பாரம்பரியத்தை சரியான முறையில் கொண்டு செல்ல தகுதி படைத்தவர் என்று அரச குடும்பத்தினர் கருதுவதால் இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த வயதில் மன்னராவதுதான் சரியானதாக இருக்க முடியும் என்றும் அரசகுடும்பத்தினர் கருதுகின்றனர். மன்னர் பதவிக்கு வில்லியம்தான் சரியான நபர், அவருக்கு இப்போது சரியான வயது வந்திருக்கிறது. எனவே சார்லஸுக்குப் பிறகு அவர் மன்னராகும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே மன்னராக்க அரச குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது கேட் மிடில்டன் என்ற பெண்ணை வில்லியம் காதலித்து வருகிறார். வில்லியம் மன்னரானால் கேட் மிடில்டன் ராணி அந்தஸ்து பெறுவார்.

வருகிற நவம்பர் மாதம் சார்லஸுக்கு 60 வயதாகிறது. இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மன்னர் பதவிக்காக இத்தனை காலம் காத்திருந்த முதல் இளவரசர் சார்லஸ்தான்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சார்லஸ் குறித்துக் கூறுகையில், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை காத்திருப்பிலேயே முடித்து விட்டார் சார்லஸ். இனிமேல் அவர் மன்னராவதால் எந்தப் பலனும் இருக்காது. எனவே தனது மகனை மன்னராக்க அவர் தடையாக இருக்க மாட்டார் என்றார்.

சார்லஸுக்குப் பின்னர் மன்னராகலாம் என்று வில்லியம் காத்திருந்தால், அவருக்கும் சார்லஸ் நிலைதான் ஏற்படும் என்பதும் அரச குடும்பத்தின் கருத்தாம்.

மன்னராக பதவியேற்பதற்கு வசதியாக அரசு நிர்வாகத்தில் தற்போது வில்லியமுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராணுவ பயிற்சியிலும் அவர் தேறியுள்ளார். இதுதவிர அரச குடும்ப நிர்வாகத்தைக் கவனிக்கும் வே அஹெட் குழுமத்திலும் அவர் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார். இதுதவிர அரச குடும்பத்தினரின் செலவுகளைக் கவனிக்கும் செலவுக் கமிட்டி உள்ளிட்டவற்றிலும் அவர் அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சி தரப்படுகிறது.

வில்லியம்தான் அடுத்த மன்னராக வேண்டும் என்று இங்கிலாந்து மக்களில் பாதிப் பேர் கருதுகிறார்கள் என்பது கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் தெரிய வந்தது. சார்லஸை விட வில்லியம்தான் மன்னர் பதவிக்குப் பொருத்தமானவர், சரியானவர் என்பது இங்கிலாந்து மக்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X