For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்!

By Staff
Google Oneindia Tamil News

Atom Smasher
ஜெனீவா: உலகே மிக ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கும் புரோட்டான் மோதல் சோதனை இன்று தொடங்கியது.

27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள டனலில் முதல் புரோட்டான் கதிர்வீச்சு இன்று சோதனைரீதியில் பாய்ச்சப்பட்டது.

ஜெனீவாவுக்கு அருகே உள்ள CERN அணு ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை தொடங்கியது.

இந்த சோதனையால் உலகமே அழியப் போகிறது என்று கூக்குரல்கள் ஒரு பக்கம் எதிரொலிக்க இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.

இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி பிளாக் ஹோல் எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.

அதே நேரத்தி்ல் இந்த சோதனை மூலம் 'Higgs Boson' என்ற சப்-அடாமிக் பார்ட்டிக்கிளை கண்டுபிடித்துவிட முடியும் என CERN விஞ்ஞானிகளின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மானுடத்தின் அடுத்தகட்ட வளர்சி்க்கு இந்த சோதனை மிக மிக அவசியம்.

எல்லோரையும் போலவே நானும் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.

இன்றைய சோதனையில் புரோட்டான் கதிர்வீச்சு கடிகார சுற்றுக்கு எதிர்சுற்றில் பாய்ச்சப்பட்டது. இந்த கதிர்வீச்சு 27 கி.மீ. நீள Large Hadron Collider-ல் சரியாக பயணித்தால், அடுத்ததாக எதிர் திசையில் இருந்து இன்னொரு புரோட்டான் கதிர் பாய்ச்சப்படும்.

இன்று நடப்பது வார்ம்-அப் சோதனை தான். முழுமையான சோதனை 6 வாரத்தில் தொடங்கும்.

அப்போது எதிரெதிர் திசையில் தலா 2,808 புரோட்டான் கதிர்கள் எதிரெதிரே பாய்ச்சப்படும். அதாவது பல பில்லியன் புரோட்டான்கள் ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் மோதிச் சிதறும்.

அதன் பின்னர் தான் பிளாக் ஹோல் வருகிறதா அல்லது Big Bang தியரிப்படி உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கான விடையும் கடவுளின் அணுத் துகள்கள் என்று சொல்லப்படும் 'Higgs Boson' தெரிகிறதா என்பதும் தெரியும்.

தொடர்பான செய்திகள்:

'Higgs Boson'! கடவுளே!'Higgs Boson'! கடவுளே!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X