For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலில் விழுந்தேன்: தடுத்தால் நடவடிக்கை - கருணாநிதி உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ள காதலில் விழுந்தேன் படத்தை தடுப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில், தியேட்டர் உரிமையாளர்களை யாரேனும் மிரட்டியிருந்தால், அதுகுறித்த ஆதாரங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரிடம் இருந்தால் அவற்றை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தால் உரிய நடவடிக்ைக எடுக்கப்படும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள ஆட்சித் தலைவரிடமோ அல்லது காவல்துறை அதிகாரியிடமோ சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் புகார் பதிவு செய்ய வேண்டும். தங்களது புகாருக்கு தேவையான ஆதாரங்களையும் அத்துடன் இணைக்க வேண்டும்.

இப்போது புகார் பதிவு செய்யப்பட்டாலும் கூட அரசு வேடிக்ைக பார்த்துக் கொண்டிருக்காமல் விரைந்து நடவடிக்ைக எடுக்கும்.

சென்சார் செய்யப்பட்ட எந்தத் திரைப்படத்தையும் எங்கும் திரையிட யாருக்கும் சுதந்திரம் உள்ளது. இது, அரசு அதிகாரிகளுக்கும் நான் சேர்த்து விடுத்த செய்தியாகும். திரைப்படம் திரையிட தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அதிகாரிகள் செய்வார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X