For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஒப்பந்த சட்டம் - 8ம் தேதி கையெழுத்திடுகிறார் புஷ்

By Staff
Google Oneindia Tamil News

Bush
வாஷிங்டன்: இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில் 8ம் தேதியன்று அதிபர் புஷ் கையெழுத்திட்டு அதை சட்டமாக்குகிறார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஒப்புதல் அளித்தன. இதுதொடர்பாக அமெரிக்க அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த, எச்.ஆர். 7081 - அமெரிக்க இந்திய அணு ஒத்துழைப்பு ஒப்புதல் மற்றும் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து இந்த மசோதா அதிபர் புஷ்ஷின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் வருகிற 8ம் தேதி புஷ் கையெழுத்திடவுள்ளார். அதன் பின்னர் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் சட்டப்பூர்வமாகி விடும். இரு நாட்டுத் தலைவர்களும் அதில் கையெழுத்திட்ட பின்னர் அது நடைமுறைக்கு வரும்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X