For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனத் தடையால் உடற்பயிற்சிக்குத் தயங்கும் குண்டுப் பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

Obese Woman
லண்டன்: மன ரீதியான தடைகளே குண்டான பெண்களை பயிற்சியில் இருந்து விலக்கி வைக்கிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஸ்லிம்மாக இருக்கும் பெண்கள், மேலும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும், இப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக உடற் பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை நாடுகின்றனர்.

அதுவே, குண்டான உடல்வாகுடைய பெண்களுக்கு சிம்ரன் போல கொடியிடை கொண்டவராக முடியுமா என்ற ஏக்கமும், கனவும் எக்கச்சக்கம்.

குண்டு பெண்கள் அழகாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒரு மன உளைச்சலை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்லிம் கனவு காணும் அவர்கள் அதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றான உடற் பயிற்சி என்றால் ஒதுங்கிக் கொள்வார்கள். அதற்கு சோம்பேறித்தனம் என்று அவர்களே சொல்லிவிடுகின்றனர்.

இதுபற்றியும் ஒரு ஆய்வு செய்தால் என்ன என்று ஒரு சர்வதேச டீம் ஆராய்ச்சியில் இறங்கியது. ஆராய்ச்சியின் முடிவு, இப்படி சொல்கிறது...

பயிற்சி என்றாலே குண்டான பெண்கள் சலித்துக் கொள்வதற்கு காரணம், மன ரீதியான தடைதான். அது அவர்களுக்கே தெரியாது. கடுமையான பயிற்சி செய்யும்போது காயம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அதிகம் உள்ளது.

அதுபோக மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சுய பயமும் ஒரு காரணம். இதுபோன்ற மன தடைகள்தான் அவர்களால் முயற்சிகளை செயலாக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம். இந்த தடைகளில் இருந்து அவர்கள் வெளி வந்து பயிற்சி செய்ய வேண்டும்.

சாப்பாட்டை குறைத்து, அதிகம் பயற்சி செய்தால் உடம்பு குறையும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. கடுமையான பயிற்சியால் எடை குறையும். ஆனால் உடல் பருமன் குறையாது என்கிறார் டெம்பிள் பல்கலையின் ஆய்வு தலைவர் மெலிஸ்ஸா நப்போலிடானா.

குஷ்பு அழகுதான். அதேசமயம், இலியானா போல இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா. எனவே உடல் பருமன் கொண்ட பெண்மணிகளே, இத்தகைய மனத் தடைகளை தாண்டி வாருங்கள், பயிற்சியைத் தொடருங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X