For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்செக்ஸ்: இன்று இறங்குமுகம்-605 புள்ளிகள் சரிவு!

By Staff
Google Oneindia Tamil News

Sensex
மும்பை: கடந்த இரு தினங்களாக பச்சைக் கொடி காட்டி வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சிவப்புக்கு மாறின.

நியூயார்க் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு எதிரொலிதான் இந்த இறங்குமுகத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று காலை 11,483 புள்ளியில் துவங்கிய வர்த்தகம், அடுத்த சில நொடிகளிலேயே 303 புள்ளிகள் சரிவு கண்டது. இப்போது 600 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது. மீண்டும் 11,000 புள்ளிகளுக்கும் கீழே போய்விட்டது சென்செக்ஸ்.

நிப்டியிலும் இன்று புள்ளிகள் கடும் வீழ்ச்சி கண்டன.

பிற்பகல் நிலவரப்படி நிப்டி 153 புள்ளிகளை இழந்து 3362-ல் ஊசலாடிக் கொண்டிருந்தது.

அடுத்த சில தினங்களுக்கு பங்கு வர்த்தகம் இந்த மாதிரி நிலையற்று தாவிக் கொண்டுதானிருக்கும் என பங்கு வர்த்தக வல்லுநர்கள் இன்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X