For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமைப் பட்டியல்-இந்தியாவுக்கு 66-வது இடம்!

By Staff
Google Oneindia Tamil News

India-Begger
நியூயார்க்: இந்தியா வல்லரசாகி வருகிறது என்று நமக்கு நாமே பெருமையடித்துக் கொண்டாலும், பசியும் பஞ்சமும் இந்தியாவில் தலை விரித்தாடுவதை உலக அமைப்புகள் பட்டியலிட்டுக் காட்டத் தவறுவதில்லை.

அந்த வகையில் சர்வதேச அளவில் வறுமை நிலவும் நாடுகளில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பசி பட்டினி தலை விரித்தாடும் 88 நாடுகளின் பட்டியலை ஐநா அறிவித்துள்ளது.

சமீபத்திய பொருளாதார நடவடிக்கைகளால் இந்தியாவின் மொத்த உற்பத்தி அதிகரித்திருந்தாலும், இந்தியாவில் பசி, பட்டினியால் வாடுபவர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

அவர்களது எண்ணிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்த எண்ணிக்கையைக் குறைப்பதில் இந்தியா உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஐநா தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் 88-வது இடத்தில் (அதாவது முதலிடம்!) உள்ள நாடு காங்கோ. இங்கு பாதிக்குப் பாதி மக்கள் பசி பட்டினியால் அவதிப்படுபதாக ஐநா தெரிவித்துள்ளது.

100 புள்ளிகள் அடிப்படையில் ஒரு நாட்டின் பட்டினி விகிதம் கணக்கிடப்படுகிறது.

30 முதல் 100 புள்ளிகள் எடுத்த நாடு முழுமையான பட்டினிக்குள்ளான அபாயகரமான நாடாகவும், 30 புள்ளிகளுக்குள் எடுத்த நாடு அபாய கட்டத்தில் உள்ளதாகவும் கணக்கிடப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X