For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் கொலை: புலிகளை தூண்டிவிட்டது ஜெ- திமுக

By Staff
Google Oneindia Tamil News

Ponmudi
சென்னை: ராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டிவிட்டதே ஜெயலலிதாதான் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி உருவாகும் போதெல்லாம் காலம் முடிவதற்குள்ளாகவே கலைக்க வேண்டும்' கலைக்க வேண்டும்' என்று ஒப்பாரி வைப்பது ஜெயலலிதாவிற்கு கைவந்த கலை.

அந்த ஒப்பாரியால் இரண்டு முறை அரசியல் லாபம் அடைந்த ஜெயலலிதா மீண்டும் கலைக்க வேண்டும்' என்ற ஒப்பாரி ராகத்தை துவக்கியிருக்கிறார்.

ஏதோ விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவு என்பது போல புரளியைக் கிளப்பி காங்கிரசிற்கும் திமுகவிற்கும் மோதலை உருவாக்க முட்டிப் பார்க்கிறார்.

முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி ஈழத்தமிழர் போராட்டத்தில் ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்- ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் என்று பகுத்துப் பார்த்து தான் ஈழத்தில் வாடும் அப்பாவித் தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

இருந்தாலும் ஜெயலலிதா தன் பழைய பல்லவியை விடுவதில்லை.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும். ராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியதே ஜெயலலிதாதான் என்பது நாடறிந்த உண்மை.

இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு- ஒரு கூட்டணித் தலைவரான ராஜீவ் காந்தி திருபெரும்புதூருக்கு வரும்போது அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து கிருஷ்ணகிரி சென்றுவிட்டு அங்கிருந்து படபடப்போடு சென்னையில் என்ன நடந்தது என போன் மூலம் ஜெயலலிதா விசாரித்தார் என்பதும்,

ராஜிவ் காந்தியின் விமான நிலைய வரவேற்புக்கு ஜெயலலிதா மட்டுமல்ல, அவர் கட்சியைச் சேர்ந்த யாருமே செல்லவில்லை என்பதும் அன்றைய பத்திரிக்கைச் செய்திகள்.

கருணாநிதி 1980ல் இந்திரா அம்மையாரோடு கூட்டணி வைத்தபோது அவரோடு மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் அவர் காரிலேயே பிரச்சாரத்திற்கு சென்றதை நாடறியும்.

ஆனால் ஜெயலலிதா ராஜீவோடு இல்லாமல் கிருஷ்ணகிரி சென்றது ஏன் என்ற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.

கருணாநிதி பெரியார் வழியில், அண்ணா வழியில் தன்னுடைய 14 வயதில் 1938ல் பள்ளிக்கூடப் பருவத்திலேயே தமிழுணர்வோடும், இன உணர்வோடும், சமுதாய உணர்வோடும் போராட்ட களத்தில் குதித்து இன்றுவரை அந்த உணர்வுகளைக் கட்டிக் காத்து வருபவர்.

ஆனால் ஜெயலலிதாவோ 7 வயதிலே இளநீர் விற்பவராக திரைப் படத்தில் நுழைந்து விபத்து அரசியலால்' தலைமைக்கு வந்தவர் என்பதை மறந்து அறிக்கை விடுகிறார்.

தமிழக அரசால் வழங்கப்படும் பொருள்கள் ஐ.நா. மூலமாக அனுப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்குப் பிறகும் கலைஞர் செய்யும் வசூல் விடுதலைப் புலிகளுக்கே' என்று அறிக்கை விடுகிறாரே ஜெயலலிதா.

சிறிதாவது அரசியல் நாகரீகமோ. தமிழர்களின் மீது பற்றோ இருந்தால் இப்படி பேசுவாரா? நான் அடிப்பதைப் போல் அடிப்பேன்- நீ அழுவது போல் அழ வேண்டும்' என்று விடுதலைப் புலிகளின் மீதுள்ள பயத்தால் வைகோ மூலம் விடுதலைப் புலிகளுக்கு இன்றளவும் ஜெயா செய்யும் மறைமுக உதவிகள் விரைவில் வெளிவரும்.

வைகோவுடன் கை கோர்த்துக்கொண்டு தன்னை விடுதலைப் புலிகளின் எதிரியைப் போல நாடகமாடும் தந்திரம் மக்களுக்குப் புரியும்.

மராட்டியத்தில் ஒரே ஒரு பீகார்காரர் கொலை செய்யப்பட்டார் என கேள்விப்பட்டவுடன் தங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து லல்லு பிரசாத், நிதிஷ் குமார், பஸ்வான் எல்லாம் கை கோர்க்கிறார்கள். இதைப் பார்த்தாவது ஜெயலலிதாவிற்கு ரோஷம் வராதா?. வரும்.... ஓடுவது சுத்தமான தமிழ் ரத்தமாக இருந்தால்.

அதிமுக பொதுச் செயலாளர் நரகல் நடை நாயகி, அவருக்கே உரிய பாணியில் இன்று ஓர் அறிக்கை தலைவர் கலைஞரின் குடும்பத்திற்காகவே ஒதுக்கியிருக்கிறார்.

அந்த அறிக்கை முழுவதிலும் முதல்வரையும் அவரது மனைவிகள், மகன்கள், மகள்களையும் திட்டித் தீர்த்திருக்கிறார். கருணாநிதி குடும்பத்துடன் இருக்கிறார், ஜெயலலிதா குடும்பம் இல்லாமல் இருக்கிறார்.

அதற்கு கருணாநிதி என்ன செய்வார்?. கலைஞரின் குடும்பத்தினரைக் கண்டு ஜெயலலிதா எதற்காக வயிறு எரிகிறார் என்று தெரியவில்லை. அந்த அறிக்கையிலே 86 வயதான கலைஞரை - இந்த வயதிலும் ஊருக்காக உழைத்துக் கொண்டிருப்பவரை கையாலாகாதவன் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

கலைஞர் கையாலாகாதவரா இல்லையா என்பதற்குச் சாட்சியாகத் தான் ஜெயலலிதா அறிக்கையிலே குறிப்பிட்ட மனைவிகள், மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்று பதில் சொல்ல எத்தனை நேரமாகும்?

இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் படும் சிரமத்தைக் குறைப்பதற்காக நிவாரண நிதி திரட்டுவதைக் குறிப்பிட்டு குறை கூறுகிறார். சுயநலத்தோடு செய்யப்படுகின்ற காரியம் தான் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுகின்ற செயலாம்!.

அந்த வகையில் முதலில் கனிமொழியை முன்னிலைப்படுத்தினார் கருணாநிதி என்கிறார். அதிலே கனிமொழியை கலைஞர் என்ன முன்னிலைப்படுத்தினார்?.

மேலும் ஜெயலலிதா தன் அறிக்கையில் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு என்று பேசும் கருணாநிதி; இலங்கைத் தமிழர்களுக்காக வேட்டி, சேலை ஆகியவற்றைக் கொடுப்பதற்குப் பதிலாக, தமிழ்ப் பண்பாட்டைச் சீர் குலைக்கும் ஆடைகளை அதாவது 'நைட்டி'களை கனிமொழி வழங்கியதாகக் கூறுகிறார்.

வேட்டி, சேலைக் கொடுப்பதற்குப்பதிலாக வெறும் 'நைட்டிகளை' மட்டும் கனிமொழி கொடுக்கவில்லை.

அடுத்த பக்கம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X