For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அவுட்சோர்சி்ங்'.. வேட்டு வைப்பாரா ஒபாமா?

By Staff
Google Oneindia Tamil News

Obama with Family
வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வாகியுள்ள பராக் ஒபாமா (47) நிற, இன, மத அடையாளங்களை எல்லாம் வென்றுதான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி ஹவாய் தீவில் பிறந்தவர் ஒபாமா. ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி்ல் சட்டம் படித்தவர். இவரது முழுப் பெயர் பராக் ஹூசேன் ஒபாமா.

இவரது தந்தை கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பர் இனத்தவர். தாயார் அமெரிக்க வெள்ளையினப் பெண். இவரது நிறமும் பெயரில் இருக்கும் 'ஹூசேனும்' தேர்தலில் ஒபமாவுக்கு பெரும் சவாலைத் தந்தவை.

இதனால் ஒபமாவின் இந்த வெற்றி நிற, இன, மத அடையாளங்களை எல்லாம் தாண்டிய மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. இளம் வயதிலேயே ஜனநாயகக் கட்சியின் பால் ஆர்வம் கொண்ட ஒபாமா மிகச் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், பேச்சாளர்.

ஹில்லாரி கிளின்டனைத் தாண்டி இவர் வேட்பாளராக முடியுமா என்று எல்லோரும் யோசித்த நிலையில் அவரை வென்று காட்டினார். அடுத்ததாக வியாட்நாம் போரில் பங்கேற்ற ஜான் மெக்கெய்னின் நாட்டுப் பற்றுக்கும், அரசியல் அனுபவத்துக்கும் இவர் இணையாவாரா என்ற கேள்வியோடு தொடங்கிய பிரச்சாரத்தில் வென்று காட்டியிருக்கிறார் ஒபாமா.

1996ம் ஆண்டுவரை சிகாகோவின் சவுத் சைட் பகுதியில் சமூக நல நிர்வாக என்ற சிறிய அரசுப் பணியில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தார். ஆனால், தனது செயல்கள், பேச்சால் அந்தப் பகுதியில் பிரபலமானார்.

1996ம் ஆண்டு இலினாய்ஸ் மாகாண செனட் சபைக்கு தேர்வானார். அன்று ஆரம்பித்தது ஒபாமாவின் அரசியல் பயணம். 2004ம் ஆண்டு பெரும் வெற்றி பெற்று அமெரிக்க செனட்டில் நுழைந்தார்.

சிறந்த எழுத்தாளரான ஒபாமா எழுதிய 'The Audacity of Hope', 'Dreams From My Father' ஆகிய புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாயின.

ஆனாலும் இவரை குடியரசு கட்சி வேட்பாளராக்கியபோது அது பெரிய சூதாட்டமாகவே பார்க்கப்பட்டது. இவரால் மெக்கெய்னை வெல்ல முடியுமா? என்ற கேள்விக்கு தனது பாணியில் பதில் தந்திருக்கிறார்.

45 ஆண்டுகளுக்கு முன் சம உரிமை கோரி போராடிய அமெரிக்காவின் மாபெரும் கருப்பர் இனப் போராளி்யான மார்ட்டின் லூதர் கி்ங்கின் கனவை மெய்யாக்கியுள்ளார் ஒபாமா.

சமீபகாலத்தில் இது போன்ற ஒரு வெற்றியை எந்த வேட்பாளரும் பெற்றதில்லை என்ற அளவுக்கு வெற்றியை பெற்றிருக்கும் ஒபாமா பிரச்சாரத்தில் பயன்படுத்திய வார்த்தை, ''Change''!. அதை செய்தும் காட்டியிருக்கிறார்.

தான் ஒரு கிருஸ்தவன் என்று ஒபாமா திரும்பத் திரும்ப சொன்னாலும் பராக் என்பது அரபிச் சொல்லாச்சே, ஹூசேன் வேறு இருக்கிறதே.. என்று எதிர் தரப்பு பிரச்சாரம் செய்தது. பராக் என்பதற்கு 'ஆசிர்வதிக்கப்பட்டவன்' என்று அர்த்தம்.

இராக்கில் அமெரிக்கப் படைகள் ஊடுருவதை எதிர்த்தவர், ஈரானுடன் நிபந்தனையில்லாமல் பேச்சு நடத்த வேண்டும் என்று சொன்ன ஒபாமாவுக்கு உலக அறிவும் மிக அதிகம்.

இந்திய-பாகிஸ்தான் சிக்கலை மிக நன்றாகவே புரிந்து வைத்திருப்பவர்.

தீவிரவாதம், அணு ஆயுத பரவல், வறுமை ஒழிப்பு, கொலைகள் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய் தடு்ப்பு.. இவை தான் தான் முக்கிய கவனம் செலுத்தப் போகும் 'ஏரியாக்கள்' என்கிறார்.

ஒபாமாவின் மனைவி மிசேலும் ஒரு வழக்கறிஞர் தான். இவர்களுக்கு மாலியா, சசா என 10 வயது, 7 வயது மகள்கள் உள்ளனர்.

பராக் பதவிக்கு வருவது யாருக்கு மகி்ழ்ச்சியோ இல்லையோ, யாருக்கு வருத்தமோ இல்லையோ, அவுட்சோர்சி்ங் செய்யும் நிறுவனங்களும், இதன்மூலம் 'வாழ்ந்து' வரும் இந்திய பிபிஓ உள்ளிட்ட நிறுவனங்களும் பெரும் அச்சத்தில் உள்ளன.

அவுட்சோர்சிங் செய்து வேலைவாய்ப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் அமெரிக்காவிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருவேன் என்று கூறியிருக்கிறார் ஒபாமா.

நம் ஊர் அரசியல்வாதிகள் மாதிரி ஓட்டு வாங்குவதற்காக மட்டும் இதைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை...!!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X