சென்னை சென்ட்ரலில் வெடிகுண்டு புரளி-பீதி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததால் அங்கு பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில்வே 'ஹெல்ப்லைன்' தொலைபேசி எண்ணுக்கு இன்று அதிகாலை 6 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவன், 8 மணியிலிருந்து 9 மணிக்குள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டிவிட்டு துண்டித்துவிட்டான்.
இதனையடுத்து ரயில்வே ஐ.ஜி. உமா கணபதி சாஸ்திரி தலைமையில் ரயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீசார், மாநகர காவல்துறையினர் என நூற்றுக்கணக்கான போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
நின்றிருந்த ரயில்கள், பயணிகள் தங்குமிடம், பயணிகளின் உடமைகள், பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கடைகள், பார்சல்கள் என அனைத்துமே சோதனையிடப்பட்டன.
பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
இந்த சோதனைகளால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது. பல பயணிகள் அச்சத்தில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
ஒரு ரூபாய் நாணயத்தால் இயங்கும் பொது தொலைபேசியில் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications