For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்த்ராயன் வெப்பம் அதிகரிப்பு-கவலையில் இஸ்ரோ

By Staff
Google Oneindia Tamil News

Chandrayaan
பெங்களூர்: நிலவைச் சுற்றி வரும் சந்த்ராயன் விண்கலத்தின் வெப்ப நிலை திடீரென 10 டிகிரி அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அதன் கருவிகள் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஆழ்ந்துள்ளது.

நிலவை 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்து கொண்டுள்ளது சந்த்ராயன். நிலவில் எரிமலைகள் வெடிக்கும்போது அதன் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் வரை உயர்வது சாதாரணம். இந்த வெப்பம் விண்கலத்தைத் தாக்காமல் இருக்கத் தேவையான வெப்பத் தடுப்பு ரசாயனம் சந்த்ராயன் விண்கலத்தின் மீது பூசப்பட்டுள்ளது.

இந்தக் கலத்தில் 9 அதி நவீன கருவிகள் உள்ளன. இதில் நிலவை முப்பரிமாண (3-D) படமெடுக்கும் கேமராக்களும் அடக்கம். இந்தக் கேமராக்கள் தொடர்ந்து படங்களை அனுப்பி வருகின்றன.

இதையடுத்து சந்த்ராயனில் உள்ள ஹை எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெட்ரோ மீட்டர் (High Energy X-ray Spectrometer-HEX), சப் கேவி ஆட்டம் ரிப்லெக்டர் (Sub keV Atom Reflecting Analyser- SARA) ஆகிய முக்கிய கருவிகளை இஸ்ரோ இயக்க இருந்தது. இதைத் தொடர்ந்து மேலும் 8 கருவிகளையும் இயக்க திட்டமிட்டுள்ளது.

இதில் HEX நிலவின் வட, தென் புலங்களில் தண்ணீர், தோரியம், யுரேனியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் கருவியாகும். SARA நிலவின் தரைப் பரப்பை ஆய்வு செய்யும் கருவியாகும்.

ஆனால், திடீரென சந்த்ராயணின் வெப்ப நிலை 10 டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளதால் இந்தக் கருவிகளின் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்பதால் இதனால் இஸ்ரோ கவலையில் ஆழ்ந்துள்ளது.

இந்த வெப்ப நிலை உயர்வு கவலை அளிப்பதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X