For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹூண்டாய் கார்களின் விலை அதிரடியாக குறைப்பு

By Staff
Google Oneindia Tamil News

Hyundai car
டெல்லி: மத்திய அரசு சென்வாட் வரியை 4 சதவீதம் குறைத்துள்ளதைத் தொடர்ந்து கார்களின் விலை மடமடவென குறைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ. 44, 792 வரை குறைத்துள்ளது.

ஏற்கனவே மாருதி கார் நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்தது. தற்போது ஹூண்டாய் நிறுவனமும் தனது அனைத்து மாடல் கார்களின் விலைகளையும் குறைத்துள்ளது.

சான்ட்ரோ கார்களுக்கான விலை ரூ. 8,834 முதல் ரூ. 12, 492 வரை குறைக்கப்பட்டுள்ளது.

கெட்ஸ் காருக்கான விலை ரூ. 13 ஆயிரத்து 413 முதல் ரூ. 19 ஆயிரத்து 422 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஸிடேன் வெர்னாவின் விலை ரூ. 19 ஆயிரத்து 625 முதல் ரூ. 26 ஆயிரத்து 174 வரை குறைக்கப்பட்டுள்ளது.

அசென்ட் காரின் விலை ரூ. 15 ஆயிரத்து 540 குறைக்கப்பட்டுள்ளது.

ஸிடேன் சொனாட்டா ரக கார்களின் விலை ரூ. 38 ஆயிரத்து 6 முதல் ரூ. 44 ஆயிரத்து 792 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐ10 கார்கள் இனி ரூ. 3.26 லட்சம் முதல் ரூ. 5.25 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். இந்தக் கார்களின் விலை ரூ. 18, 381 வரை குறைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X