For Quick Alerts
For Daily Alerts
Just In
சானியா மிர்ஸாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த சிறப்பு விழாவில் டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாமலை மற்றும் சானியா மிர்ஸா ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 6ம் தேதி நடந்த விழாவில் மயில்சாமி அண்ணாதுரைக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய விழாவில் சானியாவால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடந்த சிறப்பு விழாவில் சானியா மிர்ஸாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் சானியா மிர்ஸாவுக்கு டாக்டர் பட்டத்தை அளித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி சரப்ஜித் சிங் கலந்து கொண்டார்.
Comments
Story first published: Thursday, December 11, 2008, 17:14 [IST]