For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 4 பூகம்பங்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேசியாவின் சுலவசி மாகாணத்தில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல சுமத்ரா தீவு உள்ளிட்ட 3 இடங்களில் நேற்று நள்ளிரவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த பூகம்பம் குறித்த தகவலை அமெரிக்க புவியியல் கழகம் தெரிவித்துள்ளது.

சுலவசி மாகாணத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த பூகம்பம் பதிவானது. இதன் அளவு 6.3 ரிக்டராகும்.

அதேபோல கடந்த 6 மணி நேரங்களில் இந்தோனேசியாவின் 3 பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதில் சுமத்ரா அருகே உள்ள மென்டாவி தீவில், ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6 ரிக்டராக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.05 மணியளவில் இது ஏற்பட்டது.

இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், வேறு சில பின்விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X