For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டைம் இதழின் 2008ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஓபாமா தேர்வு

By Staff
Google Oneindia Tamil News

Obama
வாஷிங்டன்: புகழ் பெற்ற அமெரிக்காவின் டைம் இதழ், 2008ம் ஆண்டின் சிறந்த மனிதராக பாரக் ஓபாமாவை தேர்வு செய்து, அவரது படத்தை தனது முகப்பு அட்டையில் பிரசுரித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல இதழ் டைம். ஆண்டுதோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்வு செய்து அவர்களது படத்தை முகப்பு அட்டையில் பிரசுரித்து கெளரவிப்பது டைம் இதழின் வழக்கம்.

அந்த வகையில் 2008ம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் அதிபர் ஜார்ஜ் புஷ், துணை அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற சாரா பாலின், ஜான் மெக்கெய்ன், ஹில்லாரி கிளின்டன், அமெரிக்க நீச்சல் சாதனையாளர் மைக்கேல் பெல்ப்ஸ், பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் ஓபாமா வெற்றி பெற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X