• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இஸ்ரேலில் கிளை திறக்கும் எச்.சி.எல்

By Staff
|

HCL
ஜெருசலேம்: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது கிளை ஒன்றை இஸ்ரேலில் திறக்கிறது.

இஸ்ரேலின் யோக்னீம் என்ற இடத்தில், 400 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தை எச்சிஎல் ஐந்து வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. அதன் பின்னர் மேலும் ஐந்து வருடங்களுக்கு குத்தகையை நீட்டித்துக் கொள்ளும் வசதியுடன் இந்த குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாதந்தோறும் 6700 அமெரிக்க டாலர்களை வாடகைப் பணமாக எச்.சி.எல். செலுத்தும்.

தற்போது எச்.சி.எல். வாடகைக்கு எடுத்துள்ள இடம் ஒரு ஹை டெக் பூங்காவாகும். இங்கு இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் அலுவலகங்களை அமைத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X