ராமலிங்கராஜு, ராமராஜுவின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் அதிபர் ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரூ. 7500 கோடி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிமன்றம் வருகிற 16ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
அதேபோல ராமலிங்கராஜு, ராமராஜுவின் போலீஸ் காவலை நீட்டிக்கக் கோரி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications