For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமங்கலத்தில் திமுக வேட்பாளர் லதா அதியமான் அமோக வெற்றி

By Sridhar L
Google Oneindia Tamil News

Latha Adiyaman
மதுரை: திருமங்கலம் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்தே திமுக முன்னணியில் இருந்து வந்தது. கடைசி வரை ஒரு சுற்றில் கூட பின்தங்காமல் தொடர்ந்து லதா அதியமான் முன்னிலை வகித்து வந்தார்.

13வது சுற்றின் இறுதியில் லதா அதியமான் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

3வது இடத்தை தேமுதிக வேட்பாளர் தனப்பாண்டியனும், 4வது இடத்தை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபனும் பெற்றனர்.

திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர மற்ற 23 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இறுதிச் சுற்று நிலவரம்:

லதா அதியமான் (திமுக) - 79, 422
முத்துராமலிங்கம் (அதிமுக) - 40,156
தனப்பாண்டியன் (தேமுதிக) - 13,136
பத்மநாபன் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி) - 831

வாக்கு வித்தியாசம் - 39,266

சுற்று வாரியாக திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

சுற்று - 1

திமுக - 6,020
அதிமுக - 3,570

சுற்று - 2

திமுக - 11,345
அதிமுக - 8,100

சுற்று - 3

திமுக - 16,700
அதிமுக - 8,100

சுற்று - 4

திமுக - 23,254
அதிமுக - 10,284

சுற்று - 5

திமுக - 30,736
அதிமுக - 13,317

சுற்று - 6

திமுக - 37,030
அதிமுக - 16,847

சுற்று - 7

திமுக - 42,346
அதிமுக - 19,847

சுற்று - 8

திமுக - 58,352
அதிமுக - 29,009

சுற்று - 9

திமுக - 64,083
அதிமுக - 31,447

சுற்று - 10

திமுக - 70,479
அதிமுக - 34,065

சுற்று - 11

திமுக - 76,447
அதிமுக - 36,541

சுற்று - 12

திமுக - 78,106
அதிமுக - 38,765

சுற்று - 13

திமுக - 79, 422
அதிமுக - 40, 156

முன்னதாக, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் மரணமடைந்ததையடுத்து இத்தொகுதியில் கடந்த 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், திமுக சார்பில் லதா அதியமான், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உள்பட 26 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் மதுரை கொண்டு செல்லப்பட்டு, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

மொத்தம் 389 மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களும், 190 கட்டுப்பாட்டு கருவிகளும் வைக்கப்பட்டன. அந்த அறை சீலிடப்பட்டிருந்தது. அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

மருத்துவக் கல்லூரியின் நுழைவாயில் முதல் மின்னணு இயந்திரங்கள் உள்ள அறை வரை நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மருத்துவக் கல்லூரிக்குள் வெளியாட்கள் நுழைய தடைசெய்யப்பட்டது. கல்லூரியைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கல்லூரி ஊழியர்கள் அடையாள அட்டை காட்டிய பின்பே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று காலை தலைமைத் தேர்தல் நரேஷ் குப்தா, தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், மதுரை சரக டிஐஜி அம்ரேஷ் பூஜாரி, ஆட்சித் தலைவர் சீதாராமன், எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹா, தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன், மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேஷ் குப்தா, ஒட்டு எண்ணிக்கைக்காக மொத்தம் 14 மேசைகள் போடப்படும். ஒவ்வொரு மேசையிலும், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் ஒரு மத்திய அரசு ஊழியர் இருப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் கட்சி ஏஜென்டுகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X