For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி

By Sridhar L
Google Oneindia Tamil News

Sri Lanka
கொழும்பு: இலங்கை அரசு விதித்த 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கைப் படைகள் மீண்டும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. நேற்று நடந்த தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் 50 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு, ஐ.நா. சபையின் நெருக்குதல் ஆகியவற்றால் இறங்கி வந்த இந்திய அரசு, இலங்கையிடம் போர் நிறுத்தம் செய்து அப்பாவி மக்கள் வெளியேற வழி செய்ய வேண்டும் என கூறியது. இதையடுத்து 48 மணி நேர போர் நிறுத்தத்தையும், புலிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார் அதிபர் ராஜபக்சே.

ஆனால் இந்தப் போர் நிறுத்தம் கண் துடைப்பு என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அதற்கேற்றபடி அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது இலங்கை ராணுவம்.

மேலும், தமிழர்களிடையேயும் இந்த போர் நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை. மொத்தமே 65 பேர்தான் அரசு அறிவித்த பாதுகாப்பு வளையப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை.

முல்லைத்தீவு, மூங்கிலாறு ஆகிய பகுதிகளில் தீவிரத் தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் தங்கியுள்ள பெரும் திரளான தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கைப் படைகள் மூர்க்கமாக தாக்கி வருவதால் இரண்டரை லட்சம் தமிழர்களின் கதி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வளைய" பகுதி மீது இலங்கைப் படையினர் கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களை நடத்தினர்.

மேலும், உடையார்கட்டு பகுதியில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரத்தில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.

இதே பகுதியில் நடத்தப்பட்ட இரு வான் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அப்பகுதி மக்களின் குடியிருப்புக்கள் பெருமளவு அழிந்துள்ளதுடன் உடமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் போர் நிறுத்தம் அமலில் இருந்த நேற்று காலையும், பிற்பகலிலும் நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உடையயார்கட்டுப் பகுதியில் நேற்று காலை முதலே தொடர்ச்சியாக இலங்கைப் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் இதுவரை 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கியும் நேற்று காலை முதல் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில், நேற்று காலை முதல் இலங்கைப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

தேராவில் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி நடந்த பீரங்கி தாக்குதலில், 3 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

வலைஞர்மடம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி நடந்த பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X