For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்வானிக்கு பாக்.கிலிருந்து கொலை மிரட்டல்

By Sridhar L
Google Oneindia Tamil News

Advani
டெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த ஹர்கத்-உல்-முகாஜிதீன் என்ற தீவிரவாத அமைப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பாஜக மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்நிலையில் பாஜகவின் பிரதம வேட்பாளரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அத்வானி்யின் இணைய தளத்துக்கு நேற்று முன்தினம் கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஹர்கத்-உல்-முகாஜிதீன் என்ற தீவிரவாத அமைப்பு இதை அனுப்பி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து ஆந்திரா சென்றிருந்த அத்வானி டெல்லி திரும்பினார். கொலை மிரட்டல் தொடர்பான தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

உள்துறை செயலாளர், புலனாய்வு துறை இயக்குனர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X