For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர் - பலியானோர் குறித்து கவலை

By Sridhar L
Google Oneindia Tamil News

 Sri Lanka map
கொழும்பு: இலங்கை ராணுவத்தினரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டனர். போரில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த உண்மைத் தகவலையும், விவரத்தையும் அரசு வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளுடான போரின்போது பெருமளவிலான ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் கல்மடுக்குளம் அணைக் கட்டை புலிகள் தகர்த்தபோது 5000க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியானதாக கூறப்பட்டது.

ஆனால் உயிரிழப்பு குறித்து ராணுவம் வாயே திறக்கவில்லை. அரசும் அதுகுறித்து ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

அவ்வப்போது புலிகள் தாக்கும்போது எத்தனை படை வீரர்கள் இறந்தனர் என்ற விவரத்தையும் ராணுவமோ, அரசோ தெரிவிப்பதில்லை.

தற்போது வன்னி பகுதியை கைப்பற்றுவதற்காக சிங்கள ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவம் நடத்தும் குண்டு வீச்சில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் பதிலடி தாக்குதலில் ஏராளமான சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800-க்கும் அதிகமாக சிங்கள சிப்பாய்கள் பலியாகி இருப்பதாகவும், மேலும் 700-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் கொழும்பு நகரில் உள்ள உயர் ராணுவ அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிப்பாய்களின் உடல்கள் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, போரில் கொல்லப்பட்ட மற்றும் காயம் அடைந்த வீரர்களின் உறவினர்கள் கொழும்பு நகரில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்று முற்றுகையிட்டு, தங்கள் பிள்ளைகள், கணவன்மார் குறித்த விவரங்களை தருமாறு கேட்டு வற்புறுத்தினார்கள்.

மேலும் அனுராதபுரம், பொலநறுவ மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் படையினரை பார்க்க அனுமதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2 மாதங்களுக்கு முன் வன்னியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரிகளின் சம்பளம் மட்டுமே அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால் சாதாரண வீரர்களின் மாதாந்திர சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே அவர்களுடைய உறவினர்கள் ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டதாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறினார்.

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நடத்திய இந்த முற்றுகைப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X